web log free
July 01, 2025

ஹூலுக்கு எதிராக மஹிந்தவிடம் முறைப்பாடு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தமது கட்சி தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து குறித்து விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரயவசம் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளார்

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் வடக்கின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் தனக்கு எதிராக ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அவர் அந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

சிலர் தம்மை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு கேட்பதாகவும், அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் அந்த பதவியிலிருந்து விலகலாமா? என எண்ண தோன்றுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd