மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான அமரர் பெ.சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அனுஷா சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதி செயலாளர் நாயகம் பதவி, அம்முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பேராசிரியருமான விஜயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பொதுத்தேர்தலில் சுயேட்சையாக அனுஷா சந்திரசேகரன் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.