பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தலை நடத்துவதற்கு 800 கோடி ரூபாய் முதல் 900 கோடி ரூபாய் வரை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைவாக, தேர்தலை நடத்தவேண்டுமாயின் 15 ஆயிரம் ஊழியர்கள் மேலதிகமாக தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி, அம்பலங்கொடையில் நேற்று (7) நடைபெற்ற, தேர்தல் ஒத்திகைக்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.