அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன் தினம் இரவு வானில் தென்பட்டதாகக் கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் துறை பேராசிரியர் சந்தனஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கட்டான, அம்பாந்தோட்டை, ஹோமாகம மற்றும் திருகோணமலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பலரும், இந்தப் பறக்கும் பொருளை அவதானித்துள்ளனர் என்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.
பறக்கும் பொருளின் நகர்வுகள் தொடர்பான காணொளி ஒன்றும் தனக்குக் கிடைத்திருப்பதாக தெரிவித்த அவர், இது தொடர்பான நம்பகமான தகவல்களைப் பெறுவதற்கு முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.