தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய தரப்புக்களிடமிருந்து பேராசிரியர் ஹுல் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஹுல் ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிட்டு வருவதாகவும், அவர் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரியவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஹுல் தொடர்பில் இரண்டு அறிக்கைகளை கரு ஜயசூரிய கோரியுள்ளதாக அரசியல் அமைப்பு பேரவைக்கு நெருக்கமான தரப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரின் அறிக்கைகளுக்கு அமைய பேராசிரியர் ஹுல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.