ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட குழுப்பத்தை அடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது,
கட்சியின் தொழிற்சங்கமான தேசிய சேவையாளர் சங்கத்தின் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த தேசிய சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதற்கு மற்றொரு தரப்பு எதிர்வாதம் புரிந்தது. இதனால் இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கமும் அதன்பின்னர் கைகலப்பும் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.