பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று (08) அறிவிக்கப்படும் என உறுதியாக கூற முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் நிமித்தம், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நேற்று (08) நடத்தப்பட்ட பரீட்சார்த்த தேர்தலில் பங்கேற்ற தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
239 வாக்காளர்களுடன் அம்பலாங்கொட, விலேகொட தம்மயுக்திராமய விகாரையில் இந்த பரீட்சார்த்த வாக்களிப்பு இடம்பெற்றது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவது முதல் வௌியேறுவது வரையிலான காலப்பகுதியில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டது
படிமுறை இலக்கம் 01 – கைகளை கழுவி வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசித்தல்.
படிமுறை இலக்கம் 02 – வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசித்த பின்னர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக் கவசங்களை கழற்றுதல்
படிமுறை இலக்கம் 03 – கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் போது சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல்.
படிமுறை இலக்கம் 04 – வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வௌியேற முன்னர் கைகளை கழுவுதல்