கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் அல்லது அருகில் நடாத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோஷலிசக் கட்சியே இவ்வாறு திட்டமிட்டிருந்தது.
கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கோட்டை நீதவான் நீதிமன்றில் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதான செயலாளர் சேனாதீர குணதிலக மற்றும் அக்கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ ஆகியவர்கள் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கு குறித்த தடையுத்தரவு வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.