நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் நேற்று (08) பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேரில் 8 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 4 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.