விசா முடிவடைந்த நிலையில், நாட்டுக்குள் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 8 பேர், குறிகட்டுவான் பகுதியில் வைத்து, கடற்படையினரால் இன்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள், நெடுந்தீவு பகுதியில் தங்கி இருந்து பணி புரிந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களை, ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.