web log free
December 23, 2024

கருணாவின் பிரமாண்டமான பதாதை எரிப்பு

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(10) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர்.

அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன.

இத்துண்டுப்பிரசுரங்களை பாண்டிருப்பு சந்தை தாளவட்டுவான் சந்தி நீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd