2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீமுக்கு சொந்தமான மிளகு தோட்டத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மாத்தளை ஹாத்தமுனகாலி பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர், மிளகு தோட்டமே, அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேவகரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த மிளகு தோட்டம் கிராம சேவகரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கு மிளகு ஆய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சிலர், அந்த தோட்டத்துக்குள் நுழைந்து மிளகு ஆய்வதாக, பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமையவே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.