web log free
April 11, 2026

சிறுமியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகம்

காட்டுப்பகுதிக்கு அருகாமையிலுள்ள வீதியில் தினமும் அந்த 10 வயது சிறுமி செல்வதை அவதானித்த 42 வயதான நபர், அந்த சிறுமியின் பின்னாலே சென்று, சிறுமியை இழுத்து சென்று, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். 

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஓருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஓருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd