web log free
December 24, 2024

சஜித், ரணில் சொன்னது என்ன - மனம் திறந்தார் மங்கள

சஜித் பிரேமதாச தரப்பிலிருந்து மாத்தறை மாட்டவத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்த மங்கள சமரவீர திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனவே மங்களவிற்கு ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் குறித்து அவரிடம் கேட்டபோது முக்கியமான தகவல்களைத் தெரிவித்வத்தார்.

நீங்கள் சொல்வது போல, நீங்கள் இப்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்கள் இனி. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இன்று பாராளுமன்றம் என்பது திருடர்கள் அல்லது பாதாள உலகத்தினர் சம்பாரிப்பதற்கு ஒரு புகலிடமாக மாறி வருகிறது. அங்கு பேசும் விடயங்கள் ஹென்சாட்டுக்குச் செல்வது மாத்திரம் தான் அதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை.

இந்த காரணங்களுக்காக, நான் பாராளுமன்றத்திலிருந்து விலகி இந்த நாட்டின் மக்களுடன், ஒரு நபராக, இனவெறி மற்றும் மத தீவிரவாதம் மற்றும் ஜனநாயகம், சமூக நீதி, குறிப்பாக நான் நம்புகின்ற கொள்கைகள் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றில் தோன்றும் சமூக பாசாங்குத்தனத்திற்கு எதிராகச் செயற்பட முடியும் என நினைத்தேன்.

அதை எப்படிச் செய்வது. உங்கள் திட்டம் என்ன, அதற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்றுக்கொள்வது?

இந்நாட்டுக்கு அவசியமான தலைவர்கள் இல்லை. இது இந்த நாட்டிற்குத் தேவையாக இருப்பது ஒரு திட்டத்தைச் செயற்படுத்தக்கூடிய குழுவே. இந்த நாடு அழுக்காகிவிட்டது. சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளில் ஆட்சி செய்த, வாக்களித்த மற்றும் வாக்களிக்காத என்னை உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் .

இப்போது ஏற்பட்டுள்ள நாட்டின் நிலைமை பாராளுமன்றத்தில் தீர்க்க முடியாது. மூன்றில் இரண்டு பங்கு சக்தியைக் கொடுத்து அதைத் தீர்க்க முடியாது. இதை இராணுவ ஆட்சியால் தீர்க்க முடியாது. நமது நாடு உலகத்துடன் முன்னேற வேண்டுமானால், எமது இளைஞர்கள் நவீன உலகில் வாழ உதவும் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இதனால் அடுத்த சில ஆண்டுகளில், நாங்கள் பொதுமக்களுடன் உரையாடி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் சொல்வது மற்றொரு அரசியலா அல்லது சமூக இயக்கம் பற்றியதா ?

வேறொரு அரசியல் கட்சியோ, கூட்டணியோ அல்லது மன்றத்தை உருவாக்க நான் விரும்பவில்லை. அதே போல நான் ஒரு தலைவராகக் கூட இருக்க விரும்பவில்லை. எனது குறிக்கோள்களை அடைவதற்கு உழைக்கக்கூடியவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களில் ஒருவராக நான் இருக்க விரும்புகிறேன்.

அந்த மாற்றத்தை எப்போது செய்யத் தொடங்குவீர்கள்?

அதனை ஆரம்பிக்கத் திகதி நல்ல நேரம் என்னிடம் இல்லை. அன்று நான் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு படி மட்டுமே. அதே போன்று மாத்தறையில் 30 வருடங்களுக்கு அதிகமான காலம் நான் பணிபுரிந்த எனது அலுவலகத்தை மூடவில்லை. அந்த அலுவலகத்தைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன்.

ஆனால் இப்போது அந்த அலுவலகம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இயங்குகிறது.

விசேடமாக இனவெறி, சாதி, மதச் சார்பற்ற , ஜனநாயகத்தை மதிக்கக் கூடியவர்களுக்காக நான் எமது அலுவலகத்தைத் திறப்பேன்.

அவர்கள் ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மொட்டு என எந்த கட்சியும் இல்லாமல் பெரும்பான்மையாக இருக்கலாம். நாங்கள் எப்போதும் கட்சிகளைப் பற்றிப் பேசுகிறோம். ஒரு கட்சியும் இல்லாத மக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையினர் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே அவர்கள் குரல் கொடுக்க ஒரு இடம் தேவைப்பட்டாலும், நான் அங்கே இருப்பேன்.

இப்போது, நீங்கள் ஏன் இவ்வளவு தீவிரமான முடிவை எடுத்தீர்கள்?

நான் 10 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ.ல.சு.க.வை விட்டு வெளியேறி ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்பினராகப் பொறுப்பேற்றேன். ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையால், ஸ்ரீ.ல.சு.க. தனது நடுநிலைக் கொள்கைகளுக்கு இணங்காத ஒரு வலதுசாரி பாசிசக் கட்சியாகத் தன்னை மாற்றிக்கொண்டது.

அந்த நேரத்தில், தாராளமய ஜனநாயகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தலைவராக ரணில் விக்ரம சிங்க மட்டுமே என்பதை அப்போது நான் கண்டேன். ஆனால் ஜனாதிபதித் தேர்தலின் தோல்விக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலருக்கு ஐக்கிய தேசிய கட்சி என்றால் என்னவென்று தெரியாது என்பதை நான் கண்டேன்.

உண்மையாகச் சொல்வது என்றால், சேர் ஜோன் கொத்தலாவ பற்றி யாரும் பேசவில்லை, ஆனால், இந்த நாட்டில் அவரின் ஆட்சியின் போது மூன்று ஆண்டுகளில் பொருளாதாரம் வரலாறு காணா தளவு வேகத்தில் வளர்ச்சியடைந்தது அத்தோடு, சர்வதேச அளவிலும், இலங்கை மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

ஆனால் 56 இல் பண்டார நாயக்க வெற்றி பெற்ற பின்னர், ஐக்கிய தேசிய கட்சி பயந்து இதுவரைக்கும் இருந்த தாராளமய ஜனநாயக தத்துவத்திற்குப் பதிலாக, அவர்கள் பஞ்சமா படையில் தொங்க முயன்றனர்.

அதே பிரச்சினையைத் தான் இன்று நான் பார்க்கிறேன். இன்று ஐக்கிய தேசிய கட்சி சிதைந்துள்ளது. நல்லிணக்கத்திற்கான மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. அவர்கள் எப்போதும் அரசாங்கக் கொள்கைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு மாற்றுத் திட்டத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை.

மொட்டு இருக்கும் போது மற்றொரு போலியான மொட்டு இந்நாட்டுக்குத் தேவையில்லை. அதே போல மொட்டு இப்போது தீவிர வலதுசாரிகளின் சிங்கள இனவெறி சக்திகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

நாம் அவர்களிடம் பேசத் தேவையில்லை. அவர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை. இந்த நாட்டில் பெரும்பாலான மக்களிடத்தில் மிதவாதம், இனவெறி , மதம் போன்ற காண்பது குறைவு.

ஆனால் பெரும்பான்மையான மக்களின் தேவையானது தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கி நல்ல தொழிலை பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, உலகத்திற்குச் சென்று எந்த நாட்டிலும் வாழ்ந்து, உலகத்துடன் முன்னேறக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குங்கள்.

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியன மக்களுக்காகப் பேச முன்வருவதில்லை. இதற்காகத் தான் நான் நினைத்தேன் எனக்கு சீட்டுகள் , கட்சிகள், எதுவும் தேவையில்லை. நான் வெளியே உட்கார்ந்து எனக்கு முடிந்த விதத்தில் நான் முன்பு சொன்ன நம்பிக்கைக்காக எழுந்து நிற்க முடியும்.

உங்கள் விருப்ப தெரிவு இலக்கத்தைப் பற்றி தெரிவித்துள்ளீர்களா? நீங்கள் உங்கள் இலகத்தை ரத்து செய்யவில்லையா?

இல்லை, நான் ஒரு வார்த்தையிலாவது எனது விருப்பத் தெரிவு இலக்கம் சம்பந்தமான சொல்லவில்லை. அந்த 8 ஆம் இலக்கத்தில் நான் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். ஆனால் நான் ஒன்று சொல்கிறேன். வாக்குச் சீட்டில் என்னுடைய பெயரை முதலில் அச்சிட இருந்தால் முழுமையாக அவர்களின் விருப்பம் வீணாகும். நான் முன்னுரிமை வாக்குகளை வென்றாலும் நான் மீண்டும் பாராளுமன்றத்திற்குச் செல்ல மாட்டேன்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் பாராளுமன்ற அரசியலிலிருந்து விலகுவீர்களா?

எனக்கு இப்போது 64 வயது. அடுத்த தேர்தல் இடம்பெறும் போது 69 வயதாகிவிடும். உண்மையில், எனது எதிர்பார்ப்பு 70 வயதிற்குள், பாராளுமன்ற அரசியல் மட்டுமின்றி, அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஓய்வு பெறவேண்டும் எனபதுதான்.

ஏனென்றால், நான் பார்த்த வகையில் மக்கள் கடைசி தருணம் உள்ள வரையில் –  அதாவது நடக்க முடியாது சக்கர நாற்காலியில் பாராளுமன்றத்திற்கு வருகை தருகிறார்கள் அது ஒரு அவமான விடயமாகும்.

ரணில் விக்கிரமசிங்க வரவேற்று பாராளுமன்றம் வந்து வேலைகளைச் செய்யச் சொன்னால்?

நிச்சயமாகச் செல்லப் போவது இல்லை. நான் இன்று இதயத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் வாதி. ஏனென்றால் எனக்கு இன்று நடக்கின்ற நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஆடைகளை அணிந் இருக்க முடியாது.

ரணில் விக்ரமசிங்கவிடம் எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இன்று யாரும் என்ன சொன்னாலும் இன்று இந்த அரசியல் வெளியே இருக்கும் நபர்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று அரசியல் அரங்கில் இருப்பவர்களின் பார்வை மட்டுமே உள்ளது.

அவர் ஒரு கவர்ச்சியான அரசியல் நபராக இருக்கமுடியாது. இது வேறு கதை. இருப்பினும், நாட்டிற்கு அவரைப் பற்றிய ஒரு பார்வை தேவை. ஆனால், இன்று அவர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒப்பந்தத்தில் வெவ்வேறு விளையாட்டாளர்களுடன் தனியாக இருக்கிறார்.

நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஒப்பந்தக்காரர்கள் விளையாட்டாளர்கள் என அறியப்படுத்துவது யாரை? அவர்களின் பெயரைச் சொல்ல முடியாதா?

இல்லை, இது எனது தொழில் அல்ல. உண்மையாக நான் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற முடிவு செய்தேன். அந்த உறுப்பினர்களால் தான் . மறு புறம் திறமையான சில புதிய உறுப்பினர்கள் இருந்தனர். நல்ல தொழில் வல்லுநர்களான இளைஞர்கள் நிறையப் பேர் இருந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நல்லவர்கள் ஏன் ஒன்றுபட்ட படையில் இணைந்தார்கள்? இந்த ஒப்பந்தகார்கள் இன்று ஐக்கிய தேசிய கட்சியை ஆக்கிரமித்துள்ளமையாலா? நீங்கள் அவர்களின் பெயர் சொல்லப் பயப்படுகிறீர்களா?

அப்படிப் பெயர் குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை ஐக்கிய தேசிய கட்சியில் நான்கு அல்லது ஐந்து மூத்த தலைவர்களைப் பாருங்கள்.

சரி நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்ட வெளியேறக் காரணம் ரவி, தயா, ஆகியோர் தான் காரணம் என்று ஒரு வதந்தி உள்ளது. அது உண்மையா?

நீங்கள் சொல்பவர்கள் என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது. இன்று ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இன்று மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. அவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நான் கதைத்தால் அவர்கள் பயப்படுகிறார்கள். நான் கதைத்தால் தேர்தலில் தோற்று விடுவோம் என தெரிவிக்கிறார்கள். அத்தகைய முதுகெலும்பு இல்லாத ஒரு கட்சியில் என்னால் வாயை மூடிக்கொள்ள முடியாது. நான் ஒரு சங்கக் கும்பலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன், தற்செயலாக.

இன்று நேற்று அல்ல. ஒரு பாரம்பரிய பௌத்த மதத்தைத் தழுவியவன் நான். அத்தோடு, சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்திலிருந்து, பௌத்த மதத்தின் அழிவு பற்றி நான் பேசியுள்ளேன். ஆனால் நான் அத்தகைய அறிக்கைகளை வெளியிட்டபோது, சந்திரிகா மட்டுமல்ல, மஹிந்த ராஜபக்ஷவும் என்னை ஆதரித்தனர். ஆனால் இந்த கட்சிகளில் அத்தகைய முதுகெலும்புள்ளவர்கள் இல்லை. அவர்கள் பயந்தவர்கள். எனக்குக் குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

தயவு செய்து அதைப் பேச வேண்டாம். அதன் பின்னர் இந்த கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கு விசாரணை தேவை என்று கூறத் தொடங்கினர். எனவே இவை அனைத்தையும் கொண்டு அந்த முடிவை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. ஏனென்றால், எனது கருத்துக்கள் காரணமாக இந்த கட்சி தோற்றால் எனக்கு அது பிடிக்காது. இப்போது நான் இல்லை. எனவே நீங்கள் வென்று காட்டலாம்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சமகி ஜன பலயா ஆகியன உங்கள் வாயை மூடிக்கொள்ள முயற்சித்ததை உங்கள் கதை காட்டுகிறது…

ஆமாம், பலருக்கு எனது கருத்து பிரச்சினையாகிவிட்டது. ஏனெனில் அதில் அதிகம் மறைந்திருப்பது தீவிரவாதிகள்.

உங்கள் அரசியல் பாதையை இழந்துவிட்டீர்கள், இல்லையா?

எனது அரசியல் வாழ்க்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. நீங்கள் அதை எதிர்காலத்தில் அவதானிக்கலாம்.

இப்போது நீங்கள் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், ரணில், சஜித் மற்றும் பழைய நண்பர் மகிந்த ஆகியோரில் முதலில் யார் பேசியது?

இல்லை. தற்போது யாரும் பேசவில்லை. இருப்பினும், விலகுவதற்கான முடிவை எடுத்த பிறகு, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடந்த 3 ஆம் திகதி சந்தித்து, இது குறித்து அவரிடம் சொன்னேன் இதன் போது மீண்டும் சிந்திக்க வேண்டும் என சஜித் பிரேமதாச கடுமையாக வலியுறுத்தினார்.

அப்போது நான் அவருக்குச் சொன்னேன் உங்களுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் எடுக்கும் முடிவு அல்ல. எந்த மேடையிலும் நான் அவரை ஒருபோதும் குறை கூற மாட்டேன். கடந்த 4 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்குச் சென்று சந்தித்த போது நான் அவரிடம் இதையே சொன்னேன்.

ரணில் விக்கிரமசிங்க என்ன சொன்னார்?

ரணில் விக்கிரமசிங்க என்பவர் அதிகம் பேச மாட்டார் என்பது தெரியும் தானே . ஆம் என யோசித்துச் சொன்னார். ஆம் உண்மையாக இந்த நேரத்தில் நாட்டில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. இந்த நாட்டில் சிவில் சமூகத்தையும் பிற குழுக்களையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

மங்கள சமரவீர என்பவர் தந்திரமான அரசியல்வாதி, மிகவும் புத்திசாலி, உங்கள் அரசியல் மூலோபாயத்தை மெல்லிய நூலிலிருந்து தெரிவு செய்கிறீர்கள். பொதுத் தேர்தலில் தோல்வியடையும் என்ற அச்சத்திலா நீங்கள் தேர்தலிலிருந்து விலகுகிறீர்கள். ஆனால் மாத்தறை மக்கள் உங்களுக்கு வாக்களித்தால், அப்போது நீங்கள் சொல்வீர்களாக வாக்கு கேட்காமல் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என? 

இல்லை, நான் இந்த முறை கேட்டிருந்தால் 2004 ஆம் ஆண்டில், நான் பெற்ற சாதனையை முறியடித்திருப்பேன் என நான் நம்புகிறேன். எந்தக் கட்சியும் இதுவரை அதை உடைக்கவில்லை. நிதி அமைச்சராகிய நான் மாத்தறை மாவட்டத்திற்கு ஒரு பெரிய தொகையை ஒதுக்கினேன்.

நான் கேட்டிருந்தால், உண்மையில் எனது சொந்த சாதனையை உடைத்திருப்பேன். ஆனால் அது உண்மையா பொய்யா என்பதை இப்போது என்னால் சோதிக்க முடியாது. ஆனால் நான் தோற்பதற்குப் பயப்படவில்லை, ஏனென்றால் தோற்கடிக்கப்பட்ட அனுபவம் உள்ளவன்.

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் அவ்வப்போது தோற்கடிக்கப்பட்டேன். அரசியல் வாழ்க்கையில் அவ்வப்போது தோற்கடிக்கப்பட்டேன்.

ஆனால் , தோல்வியின் காரணமாக ஒரு போதும் பின்வாங்கியவன் அல்ல நான் . ஏனென்றால், ஒவ்வொரு தோல்வியையும் எனது அடுத்த வெற்றியின் அடித்தளமாக மாற்றும் வலிமை எனக்கு உள்ளது. நான் ஒருபோதும் ஒரு தோல்வியைக் கண்டு ஓடியதில்லை.

உங்கள் வேலையைச் செய்ய நீங்கள் விரும்பவில்லை என்றாலும், மாத்தறை மக்கள் உங்களை வெற்றியடையச் செய்தால் என்ன செய்வது?

தயவுசெய்து இதை இரத்தத்தில் எழுதுங்கள். நான் வென்றால் மீண்டும் பாராளுமன்றத்திற்குச் செல்லமாட்டேன்.

– சமன் சமரக்கொடி

   நன்றி; லங்கா சி நியூஸ்

Last modified on Tuesday, 16 June 2020 03:06
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd