web log free
December 24, 2024

சைபர் தாக்குதலுக்கான காரணம் இதுதான்

 அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான விளக்கத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவேஇத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றார்

இந்நிலையில், சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துகொள்வதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கியது.

பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதனை பின்பற்றியுள்ளன. எனினும், சில அரச நிறுவனங்கள் அதனை பின்பற்றியிருக்கவில்லை.

இவ்வாறு அறிவுறுத்தல்களை பின்பற்றாமையின் காரணமாகவே குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்கானது.

எவ்வாறாயினும், இலங்கையில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு காணப்படுகின்றது.

அத்துடன், விமானப்படைபிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கின்றது. இவை இரண்டும் இணைந்து செயலாற்றுவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd