உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக பொதுமக்களிடம் தான் மன்னிப்புக் கோரப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனால் அதற்காக தான் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார்.