web log free
May 09, 2025

கோத்தாவை கைது செய்ய திட்டமிருந்தது- ராஜபக்ஷ சாட்சியம்

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஒரே நோக்கம், ராஜபக்ஷர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறைவைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம், முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர், பல சந்தர்ப்பங்களில் திட்டம் வகுத்திருந்தர் என்றும் குறிப்பிட்டார்.

அவன்காட் விவகாரம் தொடர்பிலேயே கோத்தாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவிருந்தார்.

அத்துடன் அவருடைய பிரஜாவுரிமையும் இரத்து செய்யப்படவிருந்தது அதற்கான ஆவணங்கள் அன்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ, சாட்சியமளித்திருந்தார். 

 

 

Last modified on Thursday, 25 June 2020 04:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd