பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், புதிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி ராஜதுரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மருதபாண்டி ரமேஷட ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.