தேசிய அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் நிலையான அரசியல் பின்புலமொன்று காணப்படுவது மிகவும் பயனுடைய என்று கூறிய திஸ்ஸ அத்தனாயக்க, அவ்வாறான ஒருநிலை நாட்டில் தற்போது காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலையான அரசாங்கமொன்று மக்களால் உருவாக்கப்படவேண்டும் என்றும் தந்போதைய நிலையில் நாட்டு மக்கள் தேசிய அரசாங்கத்தை நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதைவிட தேர்தலுக்கு சென்று பெரும்பான்மையுடன் அரசாங்கமொன்றை உருவாக்குவதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.