இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்த போதே அவ்வணியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.