web log free
May 11, 2026

தேர்தல் விவகாரம் மஹிந்த அதிரடி அறிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிரடியான அறிவிப்புகளை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ளார். 

வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்களை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று கண்டி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd