web log free
December 24, 2024

கடன் வட்டி வீதங்கள் குறைப்பு

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை , விவசாயம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக அரசாங்கத்தின் மிதமான அபிவிருத்தி திட்டமிடல்களுக்கிணங்க இலங்கை வங்கியானது தெரிவு செய்யப்பட்ட பல பிரிவுகளுக்கு தனது வசதிவாய்ப்புகளை விஸ்தரித்துள்ளது .

இந்த வசதிகளுக்கான நலன்கள் வங்கியின் பரந்த வரிசைகளிலான பல உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதில் விவசாயத்துக்கான அபிவிருத்திக்கடன்கள் , சிறிய மற்றும் நடுத்தர , நுண் நிதிக்கான அபிவிருத்திக்கடன்கள் , குத்தகை வசதிகள் , மருத்துவ அதிகாரிகள், நீதித்துறை , சட்டத்துறை மற்றும் விமான சேவைகள் ஆகியவை சார்ந்த அதிகாரிகள் ஆகியோருக்கான தனிப்பட்ட கடன்களும் வீடமைப்புக்கடன்களும் உள்ளடங்குகின்றன .

அவசர வீடமைப்பு தேவைகளுக்கு உதவி வழங்கும் முகமாக ஒரு மில்லியன் ரூபாவுக்குட்பட்ட வீடமைப்புக் கடன்களுக்கு 10 வருட காலத்துக்கு வருடாந்த வட்டி வீதம் 9% ஆகவும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு 5 மில்லியன் ரூபாவுக்கும் இடைப்பட்ட வீடமைப்புக்கடன்களுக்கு 10 வருடம் வரையிலான மீள் கொடுப்பனவு காலம் வரையிலும் வட்டி வீதம் 10 % ஆகவும் குறைக்கப்படவுள்ளது .

ஏனைய பிரிவுகளுக்கான வீடமைப்புக்கடன்களுக்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படவுள்ளன . இதே போன்று குத்தகை கடன்களுக்கும் 3 வருட மீள்கொடுப்பனவு காலத்துக்கு குறைந்தது 10.50 % வீத வட்டி வழங்கப்படவுள்ளது . வங்கியின் விறு சர அட்டை வைத்திருக்கும் விசேட பிரிவுகளுக்கான தனிப்பட்ட கடன்கள் அதாவது தொழில் தகைமையுடன் இணைந்த மருத்துவ அதிகாரிகளுக்கு வருடாந்தம் 11 % வட்டி வீதமும் ஏனைய தனிப்பட்ட கடன்களுக்கு 11.25 % வட்டி வீதமும் வழங்கப்படவுள்ளது .

மேலும் விவசாயப்பிரிவுக்கு வருடாந்தம் 9.75 வட்டி வீதமும் நுண் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வருடாந்தம் முறையே 8% மற்றும் 10 % வட்டிவீதங்கள் வழங்கப்படவுள்ளன

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd