ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்கள் பணத்தை வீண் செலவு செய்யாத ஒரு தலைவர் ஆவார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் எங்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. அதேபோல, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னுடைய வீட்டுக்குச் சென்றே, உணவை உண்டுவிட்டுவருவார்.
அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தன் பின்னர், கங்காராம விஹாரைக்குச் சென்று அங்கு வழங்கப்படும் தானத்தை நாங்கள் உண்டோம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.