தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முயற்சிகளை முன்னெடுத்திருந்தது என கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
முதலில் அதற்கு இணங்கியிருந்த விமல் வீரவன்ச, அதன்பின்னர் அதற்கு இணங்க மறுத்துவிட்டார் என்றும் அறியமுடிகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில், 8 பேர் கடுவலை தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதனால், விமல் வீரவன்சவை தேசிய பட்டியலின் ஊடாக சந்தர்ப்பமளிப்பதற்கு மொட்டு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.