முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம், விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று தற்போது வாக்குமூலம் பெற்றுகொண்டிருக்கின்றது.
2011 உலகக் கிண்ண இறுதி போட்டியின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி போட்டியை சூதாடிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் அவருடைய நாவலப்பிட்டிய வீட்டில் வைத்து, அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பெற்றுவருகின்றனர்.
மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுக்கு, அன்றைய அணியில் இடம்பெற்றிருந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.