தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் புதுவகையான குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு யார், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பில் அந்த பெரமுனவுக்குள் ஒரு இணக்கப்பாடு ஏற்படவில்லை என அறியமுடிகின்றது.
புதிய அரசாங்கத்தில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைந்து கொள்ளவேண்டும் என்று பெரமுனவின் வேட்பாளரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால், பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள விமல் வீரவன்ச, யாரும் ஜெக் அடிக்க தேவையில்லை. தனியே ஆட்சியமைப்போம்.
ரணில், சஜித்தை விடவும் ஆகக் கூடுதலான வாக்குகளை இம்முறை நான் பெறுவேன் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் சிங்கள ஊடகமொன்றில் வெளியான செய்தியில், “ஜெக் என்ட் ஜில்“ என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.