முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாடு செய்திருந்த வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது என நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை நிறைவடைந்துள்ளன என சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையான மேலதிக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், நீதிமன்றத்துக்கு இன்று(26) இந்த விடயத்தை கூறியுள்ளார்.