தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த வயதிலும் பேராசை பிடித்து அழைகின்றார் என்று வடக்கு, கிழக்கில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளில் சில குற்றஞ்சாட்டியுள்ளன.
தனது திருகோணமலை வீட்டில் நேற்று (25) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்த இரா.சம்பந்தன், இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 20 ஆசனங்களை பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பில் கருத்துரைத்திருந்த சில கட்சிகளே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளன.