web log free
February 22, 2026

சமிந்த விஜயசிறிக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.

சமிந்த விஜேசிறி தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும், 10 ஆயிரம் பெறுமதியான ரொக்கப்பிணையிலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பத்தில் சமிந்த விஜயசிறியின் சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd