விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை, உலகின் முன்ன ணி கிரிக் கெட் பகுப் பாய்வு நிறுவனமான கிரிக்விஸ் சுடன் இணைந்து 21ஆம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முரளிதரன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் மிக மதிப்பு மிக்க வீரரா கப் பெயரிடப்பட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான CricViz மற்றும் விஸ்டன் சஞ்சிகை ஆகியன இணைந்து இந்த நூற்றாண்டின் தலைசிறந்த 30 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை, உலகின் முன்னணி கிரிக் கெட் பகுப்பாய்வு நிறுவனமான கிரிக் விஸ்சுடன் இணைந்து 21ஆம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முரளிதரன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதுகுறித்து விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சாம் ஸ்டோவ் தெரிவிக்கையில்,
“நாம் 2000 ஆம் ஆண்டிலிருந்த தரவுகளைச் சேகரித்தோம். எனவே இது 2000-2020 ஆம் ஆண்டுகளுக்கானதாக அமையும். முரளியின் மொத்தம் 800 டெஸ்ட் விக்கெட்டுகளில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் ஆம் திகதி தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை அவர் 85 போட்டிகளில் 573 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதேவேளை, முதலிடததை பிடித்துகொண்டுள்ள முத்தையா முரளிதரனுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துகொண்டுள்ளனர்.