போராட்டமொன்றுக்கு செல்லவுள்ளதாக ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று அந்த சங்கத்தால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் ஆர்.எம்.பி.ரத்னாயக்க இதனைக் கூறினார்.
2009ஆம் ஆண்டு முதல் சேவை யாப்பு கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்து தம்மை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவாரத்தைகள் ஊடாக தமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெரிந்துவிட்ட நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து தொழிற்சங்க நடவடிக்கைககளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம அதிகாரிகளுக்கு சேவை யாப்பு ஒன்றை நிறைவேற்றுவதாக 2009ஆம் ஆண்டில் இருந்து அமைச்சர்கள் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.