கருணாவின் பாதுகாவலராக பிரதமரே இருக்கிறார். ஊனமுற்ற படையினரை பிரதமர் மறந்துள்ளார். கருணாவுக்காக கருணையுடன் முன் நிக்கின்றார். கருணாவுக்கு வெள்ளைப்பூச்சு பூசுகிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும்,
‘பிரதமர் எனது தந்தையை குற்றம்சாட்டுகிறார். 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பாேது புலிகளுக்கு யார் பணம் வழங்கியது. அப்படியானவர் இன்று ஒவ்வொரு கதைகளை கூறுகிறார்’ – என்றார்.
இதேவேளை மேலும் கருணா குறித்து,
ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில் ‘அலிஷாஹிர் மௌனாவே கருணாவை புலிகளிடம் இருந்து விலக்கி யுத்த வெற்றிக்கு பங்களித்தர்’ – என்றார்.
விஜித ஹேரத் தெரிவிக்கையில் ‘கருணா கொலை செய்த ஜானக பெரேராவின் குண்டு தாக்குதலுக்கு தற்கொலை தாரிகள் வருகை தந்தனர். இது யுத்தத்துக்கு பின்னராகவே நடந்தது. கருணாவை சிஐடிக்கு கொண்டு வந்தால் பலரின் குப்பைகள் வெளியேவருமென அஞ்சுகின்றனர்.’ – என்றார்.
சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கையில் ‘பிரதமர் மஹிந்த ராஜபக்சவே கருணாவை தாலாட்டி கொஞ்சுகிறார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அப்படியல்ல. கருணாவை சில நாட்கள் சிறையில் அடைக்க முடியும். கருணா சிறையில் அடைக்கப்பட்டால் என்ன கதை கூறுவார்கள்.
கருணா விசாரிக்கப்படுவதாக கூற முடியும். கைது செய்யப்பட்டார் என்று அறிக்கையிட முடியும். முன்னரை போன்ற நிலை தற்போது இல்லை என்று காட்ட முடியும். சிறப்பாக எழுதப்பட்ட திரக்கதையே இது.’ – என்றார்.