பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை படுகொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்கு இன்றைய தினமும் கொழும்பு கோட்டை நீதவான்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின்முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு இன்றைய தினத் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பெப்ரவரி 27 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.