வத்தளை பிரதேசத்தில் புதிதாக பிறந்த சிசுவின் தலை பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வத்தளை திக்கோவிட்ட, அவரகொட்டுவ வத்த பிரதேசத்தின் வீதியில் கிடந்த சிசுவின் தலையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்த சிசுவின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிசுவின் தாயை தேடுவதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.