web log free
June 21, 2026

சங்கா நேற்று- இன்று மஹேல வாக்குமூலம்

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பிரிவில்  முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 3ஆம் திகதி காலை 9 மணிக்கு அவரை  முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2ஆம் திகதி காலை 9 மணியளவில் குறித்த விசாரணை பிரிவில்  முன்னிலையான இலங்கை அணியில் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd