web log free
February 18, 2026

நியூஸிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் இராஜினாமா

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பீட்டர் ஃபுல்டன், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஃபுல்டன், சமீபகாலமாக நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கேண்டர்பரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர், துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவியிலிருந்து விலகியமை குறித்து அவர் கூறுகையில், ‘நியூஸிலாந்து அணியுடனான என்னுடைய உறவு அற்புதமாக இருந்தது.

இருந்தாலும் தலைமைப் பயிற்சியாளர் பதவியை நான் எப்போதும் விரும்பினேன். கேண்டர்பரி அணியில் உள்ள பல வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தகுதி கொண்டவர்கள். அவர்களின் முன்னேற்றத்துக்கு நான் உதவ வேண்டும் என கூறினார்.

41 வயதான பீட்டர் ஃபுல்டன், 49 ஒருநாள், 23 டெஸ்ட் மற்றும் 12 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd