web log free
June 21, 2026

13 வயது மாணவியிடம் அதிபர் பாலியல் சேட்டை

 13 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா - ராகமை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கவுள்ள நிலையில் ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் தரம் 7ம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அண்மையில் சிரமதானப்பணிக்காக பாடசாலைக்கு, அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது சிரமதானப் பணி நிறைவுற்ற நிலையில் ஒரு மாணவி மட்டும் அதிபரினால் தடுத்து வைக்கப்பட்டு, பின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மாணவியை மீட்டுள்ளதுடன்,மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd