மாத்தளை, கந்தேநுவர- கபரகல பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும், மஹிந்தானந்த அளுத்கமகே, நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் அண்மையில் நடத்திய கூட்டத்தில், பச்சை நிறத்திலான தொப்பிகளை அணிந்தவாறு, 1000 கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.