web log free
January 13, 2026

அந்த நால்வர் யார்- விஜயதாஸ விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணை  முறி மோசடியில் தொடர்புப்பட்டுள்ள 4 முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் கொழும்பு வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாலளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணை முறி மோசடி உள்ளிட்ட விவகாரங்களுடன் தொடர்புடைய முன்னைய முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக இதுவரைக்காலமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த அரசாங்கம் இவ்விடயத்தினை கவனத்தில் எடுக்கவில்லை. எனவே, நாம் பொதுத்தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னர் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd