web log free
December 25, 2024

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேசியா கடற்கரையில் இன்றைய தினம் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

அதற்கமைய 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மத்திய ஜாவாவின் Batang பகுதியில் இருந்து 90 கிலோ மீற்றர் வடக்கே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்த நாட்டு நேரப்படி இன்று காலை காலை 9 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

700 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாலியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கத்தை உணரமுடிந்ததாக அங்கு வசிக்கும் ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று அதிகாலை இந்தியா மற்றும் சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கும் பாதிப்பு ஏதுவும் உண்டா என்பது குறித்து வளிமண்டவியல் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.

 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd