web log free
December 25, 2024

“போதை”விவகாரம்- அதிகாரி வீட்டில் சிக்கின வாகனங்கள்

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இருவருக்கு சொந்தமான 4 லொறிகள், 2 வேன்கள் மற்றும் சொகுசு கார் ஒன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் இன்று (09) மாலை பல்லேவெல பொலிஸ் பிரிவின் பாந்துராகொட பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் இந்த சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களில் 3 லொறிகளும், 2 வேன்களும் மற்றும் சொசுகு காரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் மற்றைய லொறி தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனங்கள் அனைத்தும் பல்லேவெல, பாந்துராகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று (08) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் 12 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd