கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று (09) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 252 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே நேற்று (09) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மாரவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.