ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, எதிர்வரும் 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்த சகல பிரசாரக் கூட்டங்களையும் இரத்து செய்துள்ளது.
இந்த மூன்று நாட்களும் நடத்தப்படவிருந்த பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.
இந்நிலையில், ஏனைய சகல பிரசாரக் கூட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.