அட்டனில் இன்று கொஞ்சம் நேரம் மிகவும் பரபரப்பான நிலைமையொன்று காணப்பட்டது.
நகரத்துக்கு விரைந்த பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் முண்டியடித்தனர்.
அட்டன் நகரம் முடக்கப்படபோவதாக பரவும் வதந்திகள் போலியானவை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அட்டன் நகரம் முடக்கப்படபோவதாக வதந்தி பரவியது.
இதேவேளை, போலியான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அட்டன் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.