web log free
July 01, 2025

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை இன்று (15) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை உறவினர்கள் அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்

சடலமாக மீட்கப்பட்டவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd