அனுராதபுரம், ராஜாங்கன யாய பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளனர்.
ராஜாங்கன யாய 1, 3 மற்றும் 5இல் வாழும் குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட கொத்தில் இதுவரையில் 532 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் இந்த நிலைமையினுள் ஊரடங்கும் சட்டம் அமுல்படுத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.