கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது ஆள் ஒருவருக்கு தொற்றவில்லை என்பதை சுகாதார அதிகாரிகளும், புலனாய்வு அதிகாரிகளும் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறான முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என்று உதவி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் கொரோனா தொற்றாளிகளில் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளிகள் இனங்காணப்பட்டனர்.
எனவே தேவையற்ற பயம் அவசியமில்லை என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்தார். 20 பேர் மாத்திரமே கந்தக்காடு பகுதிக்கு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதில் 16 பேர் ராஜாங்கனையில் வசிப்பவர்கள். 4 பேர் மாத்திரமே நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களாவர் என்றும் அஜித் ரோஹன தெரிவித்தார்.