பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இரண்டு நாள்களில் வெளியிடப்படும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருக்கின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக பிரதானிகளுக்கு இடையில் இன்று (16) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.