ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் ராஜாங்கனய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி கலந்துக்கொண்ட மரணச் சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டதன் காரணமாகவே அவர்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்கள் இருவரும் அந்த ஆலோசனைகளை பின்பற்றாது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மரணச் சடங்கில் கலந்துக்கொண்டு பலர் ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.