web log free
January 05, 2026

துப்பாக்கிச்சூடு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

மாகாந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானின் மற்றுமொரு மனைவிமீது நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் அவரின் உதவியாளரால் மேற்கொள்ளப்பட்டது என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கொட்டாஞ்சேனை பொலிஸ் உயரதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் , குறித்த சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் பெண்ணின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd